பொது செய்தி

தமிழ்நாடு

வாளையாரில் தவித்த 76 பேர் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
coimbatore news, tamil nadu news, tn news, tamil news, வாளையார், தமிழர்கள், தவிப்பு, சார்ஜா

மதுக்கரை: கோவை அருகே உள்ள வாளையாரில் தவித்த தமிழகத்தை சேர்ந்த 76 பேர், சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.

தமிழக - கேரள மாநில எல்லையான வாளையாருக்கு நேற்று முன்தினம் (ஜூன் 28) சுற்றுலா வாகனங்களில், 76 பேர் வந்தனர். தமிழக வருவாய் துறையினர் விசாரித்தபோது, சார்ஜாவில் இருந்து வந்ததும், அவர்களிடம் 'இ- பாஸ்' இல்லாததும் தெரியவந்தது. இவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் கூறுகையில், ''சார்ஜாவில் இருந்து கொச்சி வந்தோம். அங்கிருந்து, வேனில் வாளையார் வந்தபின், அதிகாரிகள், 'இ- பாஸ்' கேட்டனர். விமான டிக்கெட் பதிவு செய்த ஏஜன்டுகள், எங்களை வீடு வரை கொண்டு போய் விட, வாகன அனுமதி பெற்றுள்ளதாக கூறி அனுப்பினர். நேற்று (நேற்று முன்தினம்) மாலை முதல் இங்கு சாப்பிடக்கூட வழியின்றி, சொந்த மண்ணில் அகதிகள் போல நிற்கிறோம்,'' என்றனர்.


latest tamil news


கோவை மதுக்கரை தாசில்தார் சரண்யா கூறுகையில், ''சார்ஜாவிலிருந்து வந்தவர்கள் உரிய அனுமதி பெறவில்லை. விமான பயணத்துக்கான ஏஜன்டால் ஏமாற்றப்பட்டுள்ளனர். கோவை கலெக்டரிடம் பேசி, அவரவர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு வீடுகளில் தனிமைப்படுத்துவதற்காக, சான்றும் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
01-ஜூலை-202012:17:39 IST Report Abuse
dina இந்த மாதிரி இக்கட்டான சமயங்களில் மாவட்ட உதவும் ஆட்சியாளர்கள் நிஜமாக கடவுளாக தெரிவார்கள்
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-ஜூலை-202002:02:39 IST Report Abuse
தமிழ்வேல் அவனவன் தானே சட்டம் எழுதிக்கொள்வான். இதுதான் இந்தியாவின் தலை எழுத்து.
Rate this:
Cancel
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
30-ஜூன்-202014:48:42 IST Report Abuse
OUTSPOKEN உடனடி ஏற்பாடுகளை செய்த அதிகாரிகளுக்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X