கூலிப்படையினர் 120 பேர் கைது

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

கெய்ரோ: வடக்கு ஆப்ரிக்க நாடான லிபியாவில், 2011ல் உள்நாட்டு போரில், அதிபர், கடாபி கொல்லப்பட்டார். இதையடுத்து, உலகில், எண்ணெய் வளத்தில், ஒன்பதாவது இடத்தில் உள்ள லிபியாவை கைப்பற்ற, பல நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் முயன்று வருகின்றன. இதில், லிபியாவின் தலைநகர், திரிபோலியை, துருக்கி, கத்தார், இத்தாலி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். கிழக்கு பகுதி, ராணுவ தளபதி கலிபா ஹிப்டர் கட்டுப்பாட்டில் உள்ளது. இவருக்கு, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை ஆதரவளிக்கின்றன. இந்த உள்நாட்டுப் போரில் பங்கேற்க, அண்டை நாடான சூடானில் இருந்து, சென்ற கூலிப்படையினர், 120 பேரை, அந்நாட்டின் துணை ராணுவ படையினர் கைது செய்தனர். இவர்கள், சூடான் புரட்சிகர குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X