பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் 423 மீட்டர் பகுதியை ஆக்கிரமித்த சீனா

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
China, Intrudes, Indian Territory, Galwan valley, Satellite Pics, india-china border, border clash, சீனா, இந்தியா, ஆக்கிரமிப்பு, கல்வான், பள்ளத்தாக்கு, செயற்கைக்கோள், படம்

புதுடில்லி: கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் 423 மீட்டர் தூரம் வரை சீனா ஆக்கிரமித்துள்ள செயற்கைக்கோள் படம் வெளியிடப்பட்டது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். இதனையடுத்து நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதில் தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்திய பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வந்தது.


latest tamil news


இதற்கிடையே கடந்த 25ம் தேதி நிலவரப்படி, 1960ம் ஆண்டு முதல் சீனா உரிமைகோரி வரும் எல்லைக் கோட்டுப் பகுதியில் இருந்து 423 மீட்டர் தூரம் வரையுள்ள இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவியுள்ளன.
இது தொடர்பாக என்.டி.டி.வி வெளியிட்டு உள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களில், இந்திய நிலப்பரப்பின் 423 மீட்டர் தூரத்தில் சீனாவின் 16 கூடாரங்கள், ஒரு பெரிய தங்குமிடம் அமைக்கப்பட்டிருப்பதையும் மற்றும் 14 வாகனங்களையும் காண முடிகிறது. இந்த செயற்கைக்கோள் படங்கள் மூலம் சீன படைகளின் ஊடுருவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
30-ஜூன்-202022:15:04 IST Report Abuse
ocean kadappa india மிஸ்டர் ஜனார்தனன்.செயற்கை கோள் பொய் சொல்லாது. வரை படமாக இருந்தால் எப்படியும் மாற்றலாம். அந்த பள்ளத்தாக்கில் எந்த அடையாளத்தை வைத்து இரு பக்க நில பூஜ்யம் பாயிண்டைஅளப்பீர்கள்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
30-ஜூன்-202022:02:28 IST Report Abuse
ocean kadappa india 1960 ல் இந்திய எல்லைக்குள்ளான கல்வான் பள்ளம் வரை பல ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவை பிடித்த சீனா தற்போது இந்திய பகுதிக்குள் இருக்கும் அந்த பள்ளத்தின் எதிர் பகுதி கரையில் 423 மீட்டர் தூரம் வரை ஆக்ரமித்து கூடாரங்களை அமைத்துள்ளதை செயற்கை கோள் படம் காட்டுகிறது.. 1960 ல் அவன் ஆக்ரமித்த கல்வான் பகுதியை காங்கிரஸ் ஆட்சி அப்போதே மீட்டெடுக்க முயலவில்லை. அதனால் இந்திய பகுதியை மேலும் பிடித்தால் எவரும் கேட்க மாட்டார்கள் என்ற தெனாவெட்டில் இப்போது உள்ளே நுழைந்திருக்கிறான் மோடிஜியிடம் மோதுகிறான் சுதந்திரம் வாங்கி கொடுத்த பக்கா கங்கிரஸ்காரனுக்கு பின் வந்த ஜிப்பா காங்கிரஸ்காரன் தான் இதற்கு முழு பொறுப்பு. இந்நாள் வரை அவன் ஆட்சியில் இருந்திருந்தால் இந்தியாவின் பாதி பகுதி சைனாவுக்குள் போயிருக்கும். இந்திய நாகரிகம் அழிந்திருக்கும். மவுனசிங் வேடிக்கை பார்த்திருப்பார்.இப்போது சீனாவை அடிக்கிற அடியில் ஏற்கனவே இழந்த பகுதியையும் சேர்த்து மீட்டெடுக்க வேண்டும். இந்தியாவை பிடித்து அதற்குள் நுழைய ஒரு பக்கம் பாகிஸ்தான் இன்னொரு பக்கம் சைனா.
Rate this:
Cancel
Kalam - Salem,இந்தியா
30-ஜூன்-202018:19:48 IST Report Abuse
Kalam present Indian govt takes this seriouly and opposes China in every possible way. But Nehru said even grass will not grow in China occupied Kashmir. Shame on Congress
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X