பொது செய்தி

இந்தியா

கோடிக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்திற்கு எங்களை சார்ந்துள்ளனர்: டிக் டாக் அறிக்கை

Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (56)
Share
Advertisement
டிக்டாக், மத்திய அரசு,  தடை, தனி நபர் தரவு, பாதுகாப்பு, data privacy, user data, india, China, TikTok India, tiktok, statement, ban, chinese app

புதுடில்லி: மத்திய அரசு தடை செய்துள்ள 59 சீன செயலிகளில் பிரபல சமூக ஊடக செயலியான டிக் டாக், தனது பயனர்களைப் பற்றிய எந்த தகவலையும் சீன அரசு உட்பட எந்த வெளிநாட்டு அரசாங்கத்திற்கும் அனுப்பவில்லை என்றும் எதிர்காலத்திலும் அவ்வாறு செய்ய மாட்டோம் என்றும் கூறியுள்ளது.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, மாநில பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கு ஆபத்து விளைவிப்பதாக கூறி 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று (ஜூன் 30) இரவு தடை விதித்தது. இதில் பிரபல சர்ச்சைக்குரிய ஊடகமாக டிக் டாக் செயலியும் இடம்பெற்றுள்ளது. டிக் டாக் செயலி மூலம் இந்தியாவில் பல்வேறு குற்றச்சம்பவங்கள், ஜாதிய மோதல்கள், குடும்ப வன்முறைகள் நடந்துள்ளன. இந்த செயலியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே ஐகோர்ட் மதுரை கிளை தடை செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் சென்று தடை உத்தரவை நீக்கியது டிக் டாக். இந்த நிலையில் மத்திய அரசு தற்போது தடை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


latest tamil news


டிக் டாக் தடை தொடர்பாக அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் நிகில் காந்தி செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிக் டாக்கை 14 இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்து, இணையத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளோம். கோடிக்கணக்கான பயனர்கள், கலைஞர்கள், கதை சொல்லிகள், கல்வியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இதனை சார்ந்துள்ளனர். அவர்களில் பலர் முதல் முறை இணைய பயனர்கள். இந்திய சட்டத்தின் கீழ் அனைத்து தனியுரிமை தரவு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கும் டிக் டாக் தொடர்ந்து இணங்குகிறது. மேலும் இந்தியாவில் உள்ள எங்கள் பயனர்களின் எந்த தகவலையும் சீன அரசு உட்பட எந்த வெளிநாட்டு அரசாங்கத்துடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
01-ஜூலை-202011:01:41 IST Report Abuse
Amirthalingam Shanmugam பேரப்பாரு நிகில் காந்தியாம் , வெள்ளையனே வெளியேறு ,அந்நிய துணிகளை எரித்து கதர் ஆடையை அணிவோம் என்று கர்ச்சித்த ஆன்மாவின் பெயரை வைத்துக்கொண்டு " டிக் டாக்கால் " சீரழிந்த சமூக கேட்டிற்கு ஆதரவு கேக்கிறான்.
Rate this:
Cancel
Rajan - Gaborone,போஸ்ட்வானா
01-ஜூலை-202009:11:09 IST Report Abuse
Rajan அப்படி இதுபோன்ற ஒரு செயலி அவசியம் தான் என்றால் உள்நாட்டிலேயே இதனை (மிகுந்த கட்டுப்பாடுகளுடன் ) தயார் செய்வதற்கு வெகு நாட்கள் ஆகாது. அப்படி செய்வதனால் சீன பொருட்களில் இருந்து விடுபடுவது மட்டுமல்லாது பயனளிப்பவனும் பயன் பெறுபவனும் இந்தியனாகவே இருப்பான்.
Rate this:
Cancel
vvkiyer - Bangalore,இந்தியா
01-ஜூலை-202008:12:03 IST Report Abuse
vvkiyer டிக் டாக் வருவதற்கு முன் இவர்கள் வாழ்வாதாரக்கு என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ? டிக் டாக் தடையை நீக்க கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X