பொது செய்தி

தமிழ்நாடு

ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு? நாமக்கல் நகராட்சி அலுவலகம் மூடல்

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

நாமக்கல்: ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், நாமக்கல் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.


நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த, மூன்று மாதங்களில், 97 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். எட்டு பேர் சிகிச்சையில் உள்ளனர். மீதமுள்ள, 88 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். இதுநாள் வரை சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது உள்ளுரில் பணியாற்றி வருபவர்களுக்கு தொற்று பரவி வருகிறது. நாமக்கல் வாரச்சந்தையில், வியாபாரிகள் இருவருக்கு கொரோனா உறுதியானதால் அந்த சந்தை நேற்று மூடப்பட்டது. இந்நிலையில், சந்தை அருகில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும், 40 வயதுடைய, இரு பெண்கள் உள்பட, மூன்று பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நகராட்சி அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. கமிஷனர் மற்றும் இதர பணியாளர்கள் நகராட்சி திருமண மண்டபம் மற்றும் வீடுகளில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களை, அந்தந்த வார்டுகளுக்கு நேரடியாக சென்று, வழக்கமான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X