ஸ்மோக் போட்டோகிராபியில் திறமை காட்டும் விவேக் ஆனந்தன்| Dinamalar

ஸ்மோக் போட்டோகிராபியில் திறமை காட்டும் விவேக் ஆனந்தன்

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020
Share
latest tamil newsசென்னையை பூர்விகமாக கொண்டவர் எம்.விவேக் ஆனந்தன், தனியார் நிறுவனத்தில் வேலை .


latest tamil newsபறவைகள் மற்றும் காட்டு விலங்குகளின் மேல் உள்ள ஈர்ப்பால் காட்டுயிர்களை படம் எடுக்கும் வைல்டு லைப் போட்டோகிராபியில் ஆர்வம் காட்டிவருகிறார்.இதற்காக கடந்த மூன்று வருடங்களாக கர்நாடக காடுகளான கபினி, பந்திபூர், தமிழ்நாட்டின் முதுமலை மற்றும் மகராஷ்ட்ராவில் உள்ள தடோபா காடுகளில் காணப்படும் விலங்குகளையும் கேரளாவில் உள்ள தெட்டக்காடு சென்னையில் உள்ள புலிகேட் ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள பறவைகளையும் படங்களை எடுத்து வருகிறார்.


latest tamil news


Advertisement


தடோபா காட்டில் புலியை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது இவர் அமர்ந்து இருந்த திறந்த வெளி ஜீப் அருகே மிகப்பெரிய புலி அதன் வளர்ந்த குட்டிகளுடன் வெறும் 3 மீட்டர் தொலைவில் வந்து நின்றது திரில்லான மறக்க முடியாத அனுபவம் என்கிறார்.


latest tamil newsவைல்டு லைப் போட்டோகிராபி தவிர ஸ்ட்ரீட் போட்டோகிராபி,லேண்ட்ஸ்கேப் போட்டோகிராபி,டாக்குமென்டேஷன் போட்டோகிராபியிலும் ஆர்வம் உண்டு.கொரோனா காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலையில் இந்த நேரத்தை உபயோகமாக்கி பல பொருட்களை கொண்டு வீட்டில் இருந்தபடியே புராடக்ட் போட்டோகிராபி செய்து வருகிறார்.காபியில் இருந்து புகை வருவது போல ஸ்டில்லில் மோஷன் எபக்ட் காண்பித்து இவர் எடுத்த படம் மிகவும் பாராட்டைப் பெற்றுள்ளது.


latest tamil newsஇவரது படங்கள் சென்னை போட்டோவாக் குழு மூலம் கண்காட்சியில் வைக்கபட்டுள்ளது, பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளது.நிலாவை கடந்து செல்லும் விமானப்படம் அதில் சிறந்த ஒன்றாகும்.எண்ணற்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.


latest tamil newsபுகைப்படத்துறை என்பது கடல் போல இப்போதுதான் கரையில் இருக்கிறேன் முடிந்த வரை கற்று பிறருக்கு கற்றுத்தர வேண்டும் என்று விரும்புகிறேன் எனச் சொல்லும் விவேக் ஆனந்தனுடன் பேசுவதற்காக எண்:96000 00619.

-எல்.முருகராஜ்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X