சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது போதையில் தாக்குதல்: இரு வாலிபர்கள் 'அட்மிட்'

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

ப.வேலூர்: பரமத்தி இலங்கை தமிழர்கள் முகாமில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டதில், இருவர் படுகாயமடைந்தனர். பரமத்தி, இலங்கை தமிழர்கள் முகாமைச் சேர்ந்தவர் திருக்குமரன், 28; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன்கள் தனுஷ்குமார், 24, மோகன்ராஜ்,20, ஆகியோரும் நேற்று முன்தினம் இரவு ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதையடுத்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டதில் தனுஷ்குமாரும், மோகன்ராஜும் கத்தியால் உடலின் பல்வேறு பகுதிகளில் திருக்குமரனை தாக்கினர். திருக்குமரனும், தனுஷ்குமாரை கத்தியால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த திருக்குமரன் மற்றும் தனுஷ்குமாரை பகுதியினர் மீட்டு, ப.வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக திருக்குமரன் சேலம் அரசு மருத்துவமனைக்கும், தனுஷ்குமார் நாமக்கல் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோகன்ராஜை செய்து கைது செய்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X