பொது செய்தி

தமிழ்நாடு

தென் மண்டல ஐ.ஜி., தூத்துக்குடி எஸ்.பி., மாற்றம்

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
Thoothukudi, custodial death, tuticorin, Tamil Nadu govt, tn govt, appointment, S Jeyakumar, Thoothukudi SP, தூத்துக்குடி, எஸ்பி, இடமாற்றம், ஜெயக்குமார், அருண் பாலகோபாலன், முருகன், சண்முகராஜேஸ்வரன்,

சென்னை: தென் மண்டல ஐ.ஜி.,யாக முருகனும், தூத்துக்குடி எஸ்பியாக ஜெயக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் கடையை திறந்ததாக ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். அவர்கள் இருவரும் போலீசாரால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தூத்துக்குடி எஸ்.பி.,யாக இருந்த அருண் பாலகோபாலன், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில், விழுப்புரம் எஸ்.பி.,யாக இருக்கும் ஜெயக்குமார், தூத்துக்குடி எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென் மண்டல ஐ.ஜி.,யாக இருக்கும் சண்முக ராஜேஷ்வரன், இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, அந்த பதவிக்கு, பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி., முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கூடுதல் தலைமை செயலர் பிறப்பித்துள்ளார்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
30-ஜூன்-202019:28:10 IST Report Abuse
அறவோன் கோர்ட்டில் இன்றைக்கு எவ்வளவோ நடந்திருக்கிறது வெறும் டிரான்ஸ்பர் விஷயத்தை போட்ருக்கீங்க ‼️‼️‼️
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
30-ஜூன்-202019:17:58 IST Report Abuse
Ray THIS PERSON IS TOTALLY BLIND TO THE GROUND REALITIES. IS NOT THE TWO PERSONS DIED ARE CHRISTIANS AND POLICE OFFICERS HINDUS? BLINDNESS OF THE EYE IS BETTER THAN BLINDNESS OF THE HEART. - ARAB PROVERB
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூன்-202018:28:39 IST Report Abuse
babu முதலில் வருமானவரித்துறை சோதனைக்கு உத்தரவிட வேண்டும். எப்படியாவது பிடுங்கி சேர்த்துவிட்டால் போதும், திருப்பி எடுக்க எந்த சக்தியும் இல்லை என்கிற தைரியம்தான் டிரான்ஸ்பராவது, டிஸ்மிஸாவது, மானமாவது என்கிற எண்ணத்திற்கு காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X