கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆறாவது மாதம் இன்று| WHO warning on COVID-19: 'Not even close to being over. Worst is yet to come' | Dinamalar

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆறாவது மாதம் இன்று

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (2)
Share
WHO, Coronavirus, Pandemic, WHO warning, COVID-19, Tedros Adhanom, உலக சுகாதார நிறுவனம், கொரோனா, வைரஸ்,

ஜெனீவா : சீனாவின் வூஹான் நகர மக்கள் பலருக்கு காரணம் அறிய முடியாத வகையில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிக்கை வந்து இன்றுடன் ஆறு மாதங்கள் ஆகிறது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று, முடிவுக்கு அருகில் கூட இல்லை என்பதே யதார்த்தம் என்று டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.

உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று பேசினார். அப்போது கூறியதாவது: கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டு 6 மாதம் கடந்துள்ள நிலையில் உலகம் ஒரு கோடி பாதிப்புகளையும், 5 லட்சம் இறப்புகளையும் சந்தித்துள்ளது. இந்த புதிய வைரஸால் நம் உலகமும், நம் வாழ்க்கையும் எவ்வாறு கொந்தளிப்பில் தள்ளப்படும் என்பதை நாம் யாரும் நினைத்து கூட பார்த்ததில்லை. அதே சமயம் உலகெங்கிலும் நாம் நெகிழ்ச்சி, கண்டுபிடிப்பு, ஒற்றுமை போன்ற உணர்வுப்பூர்வமான செயல்களைக் கண்டோம். மற்றொரு புறம் தொற்றுநோயை பற்றிய களங்கம், தவறான தகவல் மற்றும் அரசியலாக்குவது போன்ற அறிகுறிகளையும் நாம் கண்டோம்.


latest tamil news


இது முடிவடையவே அனைவரும் விரும்புகிறோம். நம் வாழ்க்கையைத் தொடர விரும்புகிறோம். ஆனால் யதார்த்தம் என்னவென்றால், இது முடிவுக்கு அருகில் கூட இல்லை. நாம் ஏற்கனவே நிறைய இழந்துவிட்டோம், ஆனால் நம்பிக்கையை இழக்க முடியாது. சமூகத்தை மேம்படுத்துவது, தொற்றை அடக்குவது, உயிர்களைக் காப்பாற்றுவது, ஆராய்ச்சிகளை விரைவுபடுத்துவது மற்றும் நாம் அனைவரும் விரும்பும் பாதுகாப்பான, சிறந்த, பசுமையான மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய உலகத்தை உருவாக்குவதற்கான நேரம் இது. அதற்காக நமது உறுதிப்பாட்டை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு பேசியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X