பொது செய்தி

இந்தியா

பீஹாரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Bihar, Groom Dead, Guests, Attended, Wedding, Test Positive, CoronaVirus, Patna, covid 19, corona, பீஹார், மணமகன், திருமணம், கொரோனா, வைரஸ், பாதிப்பு

பாட்னா: பீஹாரில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் கொரோனா அறிகுறியுடன் இருந்த புது மாப்பிள்ளை உயிரிழந்தார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பீஹார் தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் ஜூன் 15ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் புது மாப்பிள்ளை மரணமடைந்தார். கொரோனா பரிசோதனை நடத்தப்படாமலேயே இறந்த மாப்பிள்ளையின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா பாதிப்பு உறுதியானதாக பாட்னா மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சோதனையை மேற்கொண்டதில், 80க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. பீஹாரில் முதன்முறையாக கொரோனா தொற்று அதிகம் பேருக்கு பரவிய முதல் நிகழ்வு இதுவாகும். மணமகனின் குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் அளிக்காமல் தகனம் செய்துவிட்டதால், மணமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாரா என்பதை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை.

போலீசார் கூறுகையில், 30 வயதான மணமகன் மே 12ம் தேதி தன்னுடைய திருமணத்திற்காக தீபாலி கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது. ஆனால் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருமணம் முடிந்த 2 நாட்களுக்கு பிறகு, மணமகனின் உடல்நிலை மோசமடையவே, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.


latest tamil news


இளைஞர் உயிரிழந்த விவகாரத்தை அறிந்த மாவட்ட அதிகாரிகள், திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மணப்பெண்ணுக்கு கொரோனா இல்லையென முடிவுகள் வந்துள்ளது. கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தும், தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைத்ததோடு, சமூக இடைவெளியை பின்பற்றாமல், 50க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்வில் பங்கேற்க குடும்பத்தினர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
30-ஜூன்-202020:21:32 IST Report Abuse
 Muruga Vel 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் ஜூன் 15ம் தேதி திருமணம் நடந்துள்ளது
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
30-ஜூன்-202016:20:12 IST Report Abuse
D.Ambujavalli மகனின் நோய் அறிகுறியை மறைத்து இரண்டே நாளில் அந்தப் பெண்ணை விதவையாக நிறுத்திவிட்டார்கள் போதாக்குறைக்கு வேண்டாத கூட்டம் சேர்த்து தொற்று அதிகரிக்கவும் வழி செய்துவிட்டார்கள் நம்மூர் திருமணத்தில் வந்த எத்தனைபேர் இப்படி பரப்பினார்களோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X