" ஏழைகள் பசியால் வாடக்கூடாது "- நவ.,வரை இலவச ரேசன் பொருள்: பிரதமர் மோடி உரை

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது இதற்கென 80 கோடி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இலவச கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானிய பொருட்கள் வரும் நவம்பர் மாதம் வரை வழங்கப்படும் எனவும், இதற்காக 90 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி இன்று ( 30ம்தேதி) நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் தெரிவித்தார்.டிவி மூலம் அவர் ஆற்றிய உரை
Narendra Modi, PM Modi, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, மோடி, நரேந்திர மோடி, ஏழை, இலவச ரேசன்பொருள்,  ஊரடங்கு, கொரோனா,

புதுடில்லி: ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது இதற்கென 80 கோடி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இலவச கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானிய பொருட்கள் வரும் நவம்பர் மாதம் வரை வழங்கப்படும் எனவும், இதற்காக 90 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி இன்று ( 30ம்தேதி) நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் தெரிவித்தார்.

டிவி மூலம் அவர் ஆற்றிய உரை விவரம் வருமாறு:


மக்களுக்கு எச்சரிக்கை தேவை* கொரோனாவை எதிர்தது போராடும் சூழலில் மழை காலம் துவங்கிவிட்டது.
* மழை காலம் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
* இந்தகாலத்தில் காய்ச்சல் , சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* கொரோனாவால் இந்தியாவில் உயிரிழப்போர் விகிதம் குறைவு
* ஊரடங்கை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை. பலர் பொறுப்பற்ற முறையில் இருந்ததை காண முடிந்தது.
* ஊரடங்கு தளர்வு காரணமாக பலர் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக இருந்தனர்.
* இந்தியா லட்சகணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது.
* சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு பல உயிர்களை காப்பாற்றியுள்ளது
* ஊரடங்கு தளர்வு இருந்தாலும், முன்பை விட அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
* பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாடு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது.
* நாம் செய்யும் சிறிய தவறுகள், மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும்.
* சட்டத்தை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும்.
* அரசின் விதிமுறைகளை மீறுவோர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
* மாஸ்க் அணியாமல் கொரோனா விதிமீறலுக்கு ஒரு நாட்டின் பிரதமருக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதை பார்க்கிறோம்.
* பிரதமர் முதல் சாமானியர் வரை அனைவருக்கும் நமது நாட்டில் ஒரே விதி தான்


latest tamil news

ரூ.90 ஆயிரம் கோடி செலவாகும்* நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது
* ஏழைகளுக்காக ரூ.1.75 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

* 3 மாதத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி பண உதவி அளிக்கப்பட்டுள்ளது.
* 9 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 18 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

* 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளது.
* கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை ஏழை மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்
* மேலும் 5 மாதங்கள் உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக கூடுதலாக ரூ.90 ஆயிரம் கோடி செலவாகும்
* 5 கிலோ அரிசி அல்லது கோதுமையுடன் ஒரு கிலோ கடலை பருப்பு வழங்கப்படும்.
* பண்டிகைகள் அடுத்து வருவதால், கரீப் கல்யாண் திட்டம் நீட்டிக்கப்படுகிறது
* ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவார்கள்
* பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
01-ஜூலை-202012:23:33 IST Report Abuse
dina வாழ்க ப்ரிம்மினிஸ்டர் மோடிஜி,
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
01-ஜூலை-202000:24:13 IST Report Abuse
unmaitamil இங்கும் சில பப்புக்கள்....... நல்ல தமாஷ் பேர்வழிகள்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
30-ஜூன்-202022:50:57 IST Report Abuse
Girija அத அப்படியே சாப்பிட முடியுமா ? கேஸ் வாங்க பணம் யார் கொடுப்பா ? நிர்மலாவின் அல்ஜீப்ரா கணக்கின் வழியாக பணம் கிடைப்பதற்குள் ..................... தங்கத்தின் பேரில் வட்டியில்லா கடன் தனிநபர் அதிகபட்சம் பத்தாயிரம் என்று கொடுத்து எல்லோரையும் பிள்ளைக்கவைங்க மகாராசா ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X