நேபாளத்தில் ஜூலை 22 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | |
Advertisement
காத்மண்டு: கொரோனா பரவலைத் தடுக்க நேபாளத்தில் ஜூலை 22ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. கொரோனா பரவலைத் தடுக்க ஒரே வழியாக ஊரடங்கை மட்டுமே உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. தொற்று அதிகமுள்ள நாடுகள் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன. இந்நிலையில்
Nepal, Extends, Lockdown, July 22, Lockdown extension, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, corona news, corona cases in nepal, kathmandu, நேபாளம், ஊரடங்கு, நீட்டிப்பு, ஜூலை22

காத்மண்டு: கொரோனா பரவலைத் தடுக்க நேபாளத்தில் ஜூலை 22ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. கொரோனா பரவலைத் தடுக்க ஒரே வழியாக ஊரடங்கை மட்டுமே உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. தொற்று அதிகமுள்ள நாடுகள் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன. இந்நிலையில் நேபாளமும் ஊரடங்கை ஜூலை 22ம் தேதிவரை நீட்டித்துள்ளது. இதுகுறித்து நேபாளம் அரசுத் தரப்பில், ‛திங்கட்கிழமை மாலை நடத்தப்பட்ட அமைச்சர்கள் சந்திப்பைத் தொடர்ந்து தற்போது நிலவும் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 22ம் தேதிவரை நேபாளத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.latest tamil newsஊரடங்கு நீட்டிப்பு குறித்து நேபாளம் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‛வணிகப் பாதைகள் தவிர பிற எல்லைகள் மூடப்படும். அவசரத் தேவைகளைத் தவிர்த்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள் ஆகியவை மூடப்படும்,' என்றார். நேபாளத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 90% வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள். அதிலும் இந்தியாவில் இருந்து வந்தவர்களே அதிகம். இதில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை. மேலும், நேபாளத்தில் உள்ள 77 மாவட்டங்களில் 75 மாவட்டங்களில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X