பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 90 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு; இதுவரை 1,201 பேர் பலி

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Tamilnadu, CoronaCases, DeathToll, Discharge, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று (ஜூன் 30) ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 3856 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 87 பேர். இன்று மட்டும் 30,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 11 லட்சத்து 70 ஆயிரத்து 683 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,378 பேர் ஆண்கள், 1,565 பேர் பெண்கள். மொத்தத்தில் கொரோனா பாதித்த, ஆண்களின் எண்ணிக்கை 55,502 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 34,644 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 21 ஆகவும் உள்ளது.


latest tamil news


தமிழகத்தில் 90 ஆய்வகங்கள் (அரசு-47 மற்றும் தனியார் 43) உள்ளன. இன்று மட்டும் 2,325 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 074 ஆக உள்ளது.


வயது வாரியாக பாதிப்பு

12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 4,437 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 74 ஆயிரத்து 967 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 ஆயிரத்து 763 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதித்த 60 பேர் உயிரிழந்தனர். அதில், 16 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,201 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
01-ஜூலை-202011:25:04 IST Report Abuse
Matt P தன்னை தான் காக்க கறொனாவிடமிருந்து தன்னை தான் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் கரோனா.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
01-ஜூலை-202009:26:55 IST Report Abuse
vbs manian இந்த காரோண விலங்குகள் செல்ல பிராணிகளுக்கு வராதா.. மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்.
Rate this:
Cancel
30-ஜூன்-202022:53:34 IST Report Abuse
முருகன் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இப்போது கொரானவையும் வாழ வைக்கிறது போல. கொரானவை வீழ்த்துவதிலும் அன்டை மாநிலங்களை காட்டிலும் நாம் தனிப்படுகிறோம். தமிழர்களாகிய நாம் இதிலும் நம்மைத்தவிற யாருமில்லை என்று பெருமைபடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X