சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 30) அதிகபட்சமாக சென்னையில் 2,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 42 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரு நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 3,943 பேரில் சென்னையில் மட்டும் 2,393 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 58,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 257 பேருக்கும், செங்கல்பட்டில் 160 பேருக்கும், திருவள்ளூரில் 153 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 90 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று சென்னையில், 42 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், மதுரை, திருவள்ளூரில் தலா 3 பேரும், ராமநாதபுரத்தில் 2 பேரும், கரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், காஞ்சிபுரத்தில் தலா ஒருவரும் என 60 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்


மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் விவரம்

