அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜூன் 30, 2020
Share

அறிவியல் ஆயிரம்

கொரோனாவின் ஆபத்து


கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல், இருதய பிரச்னை ஏற்படுகிறது. தற்போது புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் சிலருக்கு, பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் கொரோனா உருவாக்குகிறது என அமெரிக்காவின்
ஐஹான் மருத்துவ பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் 41 கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இதனை கண்டறிந்துள்ளனர். மூளைக்கான ரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. இதனால் பக்கவாதம் ஏற்படுகிறது. கடுமையான நரம்பியல் மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது.

தகவல் சுரங்கம்

தேசிய டாக்டர்கள் தினம்


மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வராக இருந்தவர் டாக்டர் பி.சி. ராய். சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சிறந்த டாக்டராகவும் பணியாற்றினார். இவர் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை 1ல் தான். மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி என தான் பங்கெடுத்த துறைகளில் முன்மாதிரியாக திகழ்ந்தார். 'சுதந்திரம் எனும் கனவு நிறைவேற இந்தியர்களுக்கு வலிமையான உடலும், மனமும் தேவை' என்றார். ஏழைகளுக்காக, பல மருத்துவமனைகளை தொடங்கினார். இவரது சேவைகளை போற்றும் வகையில், இவரது பிறந்தநாள் தேசிய டாக்டர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X