பொது செய்தி

இந்தியா

சீனாவின் பங்கு இருந்த போதும் பப்ஜி ஆப் தப்பியது எப்படி?

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
PUBG, TikTok, Banned, India, Chinese Apps,india, central government, govt of india, chinese applications, india-china stand off, border issues, eastern ladakh, indian soldiers death,  பப்ஜி, டிக்டாக், செயலி, ஆப், தடை, இந்தியா, சீனா

புதுடில்லி: மத்திய அரசு தற்போது 59 சீன செயலிகளுக்கு தடை விதித்திருப்பது முதல் கட்ட நடவடிக்கை தான் என்றும், இது அடுத்தடுத்து தொடரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது பிரபல போர் கள விளையாட்டான பப்ஜி செயலிக்கு தடை வரக்கூடும்.

இந்திய பயனர்களின் தகவல்களை திருடி சீன அரசுக்கு அளிப்பது, உளவு பார்ப்பது, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது போன்ற காரணங்களால் டிக் டாக், ஹலோ, வீ சாட், கிளப் பேக்டரி உள்ளிட்ட பிரபலமான 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை விதித்தது. இது சீனாவின் டிஜிட்டல் சில்க் ரூட் கனவுக்கு ஒரு அதிர்ச்சியைத் தந்துள்ளது. இந்த தடை முதல் கட்டம் என்றும், அடுத்த சுற்றில் அதிகமான செயலிகளுக்கு இந்த தடை விரிவாக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகின்றனர். இதில் முக்கியமாக சீனா விநியோகஸ்தராக இருக்கும் பப்ஜி செயலி அடிபடும் என தெரிகிறது.


latest tamil news


டிக் டாக் போன்ற சமூக ஊடக செயலிகளுக்கு அடுத்தப்படியாக இளைஞர்கள் அடிமையாக கிடக்கும் செயலிகளில் ஒன்று பப்ஜி. ஆன்லைன் போர் விளையாட்டான இந்த கேமை சீனா உருவாக்கவில்லை. தென் கொரிய வீடியோ கேம் நிறுவனமான புளூஹோல் இதனை தயாரித்தது. இது உலகளவில் உடனடியாக பிரபலமானதும், சீனாவின் மிகப்பெரிய இணையதள தொழில்நுட்ப நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் இந்த பப்ஜி கேமின் விநியோகஸ்தராக வந்தது. இருந்த போதும் இச்செயலி தற்போது தடை செய்யப்படாததற்கு காரணம் தென் கொரியாவின் கூட்டணியால் தான் என்கின்றனர்.


latest tamil newsஇது பற்றி மத்திய அமைச்சக வட்டாரங்கள் கூறுவது: சீனா ஒன்றில் முதலீடு செய்வது அல்லது உற்பத்தி செய்வது என்பது ஒரு தயாரிப்பை தடை செய்வதற்கான அடிப்படையாக இந்தியா கருதவில்லை. பப்ஜியும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அது தற்போது தேர்ச்சி பெற்றிருக்கலாம். பயனர்களின் தகவல் திருட்டு என்பது தடைக்கு ஒரே ஒரு அடிப்படை. அதனால்தான் இந்த அறிவிப்பு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடமிருந்து வந்தது, வர்த்தக அமைச்சகத்திலிருந்து வரவில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
01-ஜூலை-202004:43:47 IST Report Abuse
தல புராணம் //இந்திய பயனர்களின் தகவல்களை திருடி சீன அரசுக்கு அளிப்பது, உளவு பார்ப்பது, // முகநூல் (Facebook) மற்றும் ட்விட்டர் (Twitter) இவ்விரண்டிலும் கிடைக்காத தகவல்களா ?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
01-ஜூலை-202004:41:36 IST Report Abuse
தல புராணம் தோனியோட பிடித்தமான விளையாட்டு தான் பப்ஜி.. பிரதமருக்கும் பிடித்த பொழுதுபோக்கு பப்ஜியாக இருக்குமோ?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-ஜூலை-202004:17:47 IST Report Abuse
J.V. Iyer எதற்கு சீன செயலிகள்? இந்தியாவில் தான் நிறைய மென்கணினி படித்தவர்கள் அதிகம் இருக்கிறார்களே? அவர்களால் புதிய செயலிகளை தயாரிக்க முடியாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X