மாஸ்க் அணியுங்கள் என கூறிய பெண் ஊழியரை தாக்கிய மேலதிகாரி

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement

நெல்லூர்: ஆந்திர ஓட்டல் ஒன்றில், மாஸ்க் அணிந்து பேசும்படி கூறிய பெண் ஊழியரை, துணை மேலாளர் கடுமையாக தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news



ஆந்திர மாநிலம் நெல்லூரில், அம்மாநில சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் துணை மேலாளராக பாஸ்கர் என்பவர் உள்ளார். அவர் மாஸ்க் அணியாமல் ஊழியர்களிடம் பேசியதாக தெரிகிறது. அவரை மாஸ்க் அணிந்து பேசும்படி சக பெண் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திமடைந்த துணை மேலாளர், அப்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார்.


latest tamil news



ஆத்திரம் அடங்காத அவர், பெண்ணை கீழே தள்ளி, தலைமுடியை பிடித்து அடித்தும், கட்டையால் கடுமையாக தாக்கியும் உள்ளார். ஜூன் 27ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்டிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான புகாரில், நெல்லூர் போலீசார் பாஸ்கரை கைது செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
02-ஜூலை-202010:14:53 IST Report Abuse
ponssasi ஒரு குற்றவாளி கைதுசெய்யப்படவேண்டும் என்றால் அது ஊடகத்தில் வரவேண்டும் மக்கள் அதை பார்த்து காரி உமிழ வேண்டும் அப்போதுதான் அரசு அவர்களை கைது செய்யும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இது பேராபத்து
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-ஜூலை-202008:15:37 IST Report Abuse
Sampath Kumar ஆத்திரம் கண்ணை மட்டும் அல்லா பெண்ணையும் மறைக்கும் போல
Rate this:
Cancel
sam - Bangalore,இந்தியா
01-ஜூலை-202016:43:26 IST Report Abuse
sam Even in சாத்தான்குளம் same thing could have happened.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X