தெலுங்கானாவில் லேசான கொரோனா பாதித்தவர்களுக்கு வீட்டு தனிமைப்படுத்துதல்

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் லேசான மற்றும் அறிகுறியற்ற கொரோனா பாதிப்புகளை கொண்டவர்களை வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆயினும் பாதிப்புகள் கூடிக்கொண்டே செல்கிறது. தெலுங்கானாவில் லேசான , அறிகுறியற்ற பாதிப்புகளுடன் கூடிய நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்துதல் முறையை கையாள தெலுங்கானா திட்டமிட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவமனை தட்டுப்பாடு காரணமாக பாதிப்புகளின் அடிப்படையில் நோயாளிகளை (லேசான பாதிப்பு) வீட்டில் தனிமைப்படுத்துவது உண்டு. தற்போது இது தெலுங்கானாவில் நல்ல ஊக்குவிக்கும் முடிவுகளை தர துவங்கியது.


latest tamil news



தெலுங்கானாவின் சிகிச்சையில் உள்ள 9,000 கொரோனா பாதிப்புகளில் 7,109 பேர் பாதிப்புகளுடன் (லேசான பாதிப்புகளை) கொண்ட நோயாளிகள் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர். மருத்துவர்கள் தொடர்ந்து அவர்களது நிலைமையை கண்காணித்து வருகின்றனர். மாநிலத்தில் ஏற்கனவே 1,436 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து குணமடைந்துள்ளனர். 7,109 நோயாளிகளில், வெறும் 26 (தீவிர சிகிச்சை) தேவைப்படும் நபர்கள் மட்டும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டால் போதுமானது. மற்றவர்கள் குணமடைந்துள்ளனர். சிறந்த நடவடிக்கைகளால் கொரோனாவை தோற்கடிக்க முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும். பீதி அடைய கூடாது என சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் நேற்று தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், நோய் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களும் வீட்டுத் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவதில்லை. லேசான, மிகவும் லேசான மற்றும் அறிகுறியற்ற தனிமை கொண்ட நபர்கள் மட்டுமே வீட்டு தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். அவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தும் நபர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருக்க வேண்டும். தனி கழிப்பறையை சுத்தமாக பேணி காக்க வேண்டும். அத்தகைய வசதி இல்லாத நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க பராமரிப்பாளர் என இருக்க வேண்டும் மற்றும் பராமரிப்பாளருக்கும் மருத்துவமனைக்கும் இடையே ஒரு தொடர்பு இணைப்பு இருக்க வேண்டும்.


latest tamil news



தொடர்ந்து, நோயாளிகளின் சுகாதார அறிக்கையை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியிடம் தெரியப்படுத்த வேண்டும். நோயாளிகளுக்கு ஏதேனும் பிரச்னை அல்லது மரத்துவரின் ஆலோசனை தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகலாம். நோயாளிகள் நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனர் என்பதற்கான சான்றிதழை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அளித்தவுடன், நோயாளிகள் தங்கள் அறிகுறிகளைக் கண்டறிந்தவுடன், அவர்கள் வீடு தனிமைப்படுத்தப்படுவதை நிறுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X