சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ஏன் இந்த பாரபட்சம்?

Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 ஏன் இந்த பாரபட்சம்?

ஏன் இந்த பாரபட்சம்?

தப்பித் தவறிக் கூட, காங்கிரசை தெலுங்கானாவில் வளர விட்டு விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார், அம்மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான, மறைந்த நரசிம்ம ராவ், பிரதமராக பதவி வகித்தவர். மத்திய உள்துறை அமைச்சர், ஆந்திர முதல்வர் என, அரசியலில் பல உச்சங்களை தொட்டவர். இதுமட்டுமல்லாமல், சிறந்த இலக்கியவாதி; கவிஞர் என, பல பெருமைகளை உடையவர். இவர் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தற்போதைய தெலுங்கானா தான் இவரது பூர்விகம். இவரது நுாற்றாண்டு விழாவை அடுத்தாண்டு தெலுங்கானா முழுதும் பிரமாண்டமாக கொண்டாட தடபுடலான ஏற்பாடுகளை செய்துள்ளார், சந்திர சேகர ராவ். விழாக் குழுவில் நரசிம்ம ராவ் குடும்பத்தினரையும்
சேர்த்துள்ளார்.'நரசிம்ம ராவின் நுாற்றாண்டு விழாவை காங்கிரஸ் கட்சியினர் தான் கொண்டாட வேண்டும். அவர்கள் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. நாங்கள் அப்படியில்லை. அவரது புகழை, உலகம் முழுதும் வெளிச்சம் போட்டு காட்டுவோம். காங்கிரசின் குள்ளநரித் தனத்தையும் அம்பலப்படுத்துவோம்' என்கிறார் சந்திரசேகர ராவ். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரசாரோ, 'முதல்வர் சொல்வதிலும் நியாயம் இருக்கத் தானே செய்கிறது. நம் கட்சி மேலிடம், தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் விஷயத்தில் ரொம்பத் தான் பாரபட்சம்
காட்டுகிறது' என, புலம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
l vijayaraghavan - CHENNAI,இந்தியா
01-ஜூலை-202017:14:59 IST Report Abuse
l vijayaraghavan நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த பொது யாரை எங்கே வைக்கணுனா அங்கே வைத்திருந்தார். ஐந்தாண்டு காலம் வெற்றிகரமாய் ஆட்சி நடத்தினார் . பின் புறத்திலிருந்து அவரை யாரும் ஆட்டி வைக்க முடியாத படி சாமர்த்தியமாய் ஆட்சி செத்தார். அவர் மிகுந்த அரசியல் அனுபவம் உள்ளவர் என்பதால் அவரிடம் அது மீற முடிய வில்லை. இதை எல்லாம் அறிந்தவர் சந்திர சேகர ராவ்.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
01-ஜூலை-202013:22:06 IST Report Abuse
Suppan பாதாளத்துக்குச் சரிந்த பொருளாதாரத்தை மீட்டு எடுத்தவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X