சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

முன்னாள் மத்திய நிதியமைச்சர், காங்கிரசை சேர்ந்த சிதம்பரம்: 21 நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினர். ஞாயிறு மட்டும் விடுமுறை தந்து, திங்கள் கிழமை மீண்டும் விலையை உயர்த்தியுள்ளனர். ஏழைகளுக்கு எதிரானது மோடி அரசு என்பதற்கு இதை விட சிறந்த ஆதாரம் ஏதும் இல்லை. மக்கள் கையில் இருக்கும் கொஞ்ச பணத்தையும், மோடி அரசு பிடுங்கிக்
கொள்கிறது.

'டவுட்' தனபாலு: மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பெட்ரோல், டீசல், மதுபானங்கள், சிகரெட் மீது வரி விதிக்கும் என்பது, இந்திய மக்கள் இதுவரை கண்டு வந்துள்ள ஒன்று தான். காங்கிரஸ் ஆட்சியின் போதும், இதுபோல பலமுறை வரி விதிக்கப்பட்டதால் தான், பெட்ரோலிய பொருட்களின் விலை, இப்போது உச்சத்தில் இருக்கிறது என்பதும், நடுநிலையாளர்களுக்கு, 'டவுட்' இல்லாமல் தெரிந்திருக்கும்!


தமிழக, பா.ஜ., தலைவர் முருகன்
: கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால், ஆறு மாத காலத்துக்கு முன்பே, பெட்ரோலிய நிறுவனங்கள், கச்சா எண்ணெய் வாங்கிவிட்டன. அதன் அடிப்படையிலேயே, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை, விரைவில், ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வரப்படும்.

'டவுட்' தனபாலு: பெட்ரோலியத்துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த தர்மேந்திரா பிரதானே, இவ்வளவு அருமையான பதிலை தெரிவித்ததில்லை. நீங்கள் தெரிவிக்கும் பதில், அரசியல் சார்பற்றவர்களுக்கும் இனிமேல் நன்கு புரியும். தொடர்ந்து இப்படியே, பொருளாதார விவகாரங்களை பேசினால், மத்திய நிதியமைச்சர் ஆவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனினும், இப்போது அடிக்கடி மத்திய அரசு, பெட்ரோல் விலையை உயர்த்துவதால், தமிழகத்தில் கட்சியை வளர்க்குமா என்பது, 'டவுட்' தான்!



மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், நடிகர் கமல்:
சாத்தான்குளம் வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, பொறுப்பை தட்டிக்கழிக்க, முதல்வர் முயல வேண்டாம். இதற்கு முன் நடந்த, துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு, குட்கா ஊழல் போல், இதையும், சி.பி.ஐ., வழக்கின் வரிசையில் சேர்க்க வேண்டாம். மக்கள் மறந்துவிடுவர் எனக் காத்திருக்காமல், நீதியை காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதியே.

'டவுட்' தனபாலு: அரசே மறந்துவிட்ட பல வழக்குகளை, நீங்கள் நன்கு நினைவு வைத்துள்ளீர்களே... ஊரடங்கிற்கு பின், தீவிர அரசியலில் ஈடுபட நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள் போல இருக்கிறது. அதனால் தான், சமீபகாலமாக, அரசியல் தலைவர்களால் மறக்கடிக்கப்பட்ட விவகாரங்களை எழுப்புகிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
01-ஜூலை-202013:18:28 IST Report Abuse
Suppan உள்ளூர் போலீஸ் விசாரித்தால் சி பி ஐ விசாரணை வேண்டும் என்பார்கள். சி பி ஐ விசாரணை என்றால் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார் என்கிறார் இந்த மஹாநுபாவன்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-ஜூலை-202006:17:06 IST Report Abuse
D.Ambujavalli சி பி ஐ ஆற அமர பத்து ஆண்டுகளுக்குப் பின் சாட்சிகளைத் தேட ஆரம்பிக்கும். பலர் ஊரை விட்டோ, உலகை விட்டோ போய் இருப்பர் ஆதாரமில்லை என்று தள்ளிவிடலாம் உடனடி நடவடிக்கை என்றுதான் காசை வீசி எரிந்து வாயடைத்து, நாளையே அக்குடும்பம் அப்பாவும் பிள்ளையும் அடித்துக்கொண்டுதான் இறந்தார்கள் என்று சொல்ல வைத்து விடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X