சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துாய்மைக் காவலர்கள் பணிகளை, யாராலும் இந்த நேரத்தில் குறை சொல்ல முடியாது...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை: அதிகாலை, 1:30 மணிக்கு, செங்கல்பட்டு மருத்துவ கல்லுாரிக்கு திடீரென சென்றேன். அங்குள்ள டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள் சுறுசுறுப்பாக, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததை பார்த்து, அவர்களை பாராட்டி வந்தேன்.



'அவிங்க, பெரிய அரசியல் கட்சித் தலைவருங்க... அவிங்களை சட்டம் கட்டுப்படுத்தாது...' என, வேதனை தெரிவிக்கத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
பொதுமக்கள், தொழிலாளர்கள், ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டம் செல்ல, இ -பாஸ் கேட்டு, அதிகாரிகள் கெடுபிடி காட்டுகின்றனர். ஆனால், தி.மு.க., இளைஞரணி செயலர், மகளிரணி செயலர் கனிமொழி, காங்., தலைவர் அழகிரி போன்றோருக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.



'வித்தியாசமாக யோசிக்கும் விவசாயிகள் சங்கத் தலைவராக இருக்கிறீர்களே...' என, சொல்லத் தோன்றும் வகையில், காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் பேட்டி:
மாநில, மாவட்ட அளவில் கூட்டுறவு வங்கிகள் தான், ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் செல்கின்றன. கிராமங்களில் உள்ள, சொசைட்டிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். மாநில, மாவட்ட வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் செல்வதால், சேமிப்பு பணம் பாதுகாப்பாக இருக்கும்.



'ஆம் ஆத்மி என்றால், ஏழைகள் என பொருள். உண்மையிலேயே உங்கள் கோரிக்கை, ஏழைகளுக்கானது தான்...' என, பாராட்டத் தோன்றும் வகையில், ஆம் ஆத்மி தொழிற்சங்கம் அறிக்கை:
மண்டலம் விட்டு மண்டலம் சென்று, பணியாற்ற வேண்டிய சூழலில், 'இ- - பாஸ்' கிடைக்காமை உள்ளிட்டவற்றால், பலரால் பணி செய்ய முடியவில்லை. எனவே, ஊரடங்கு நாட்களை, பணி நாட்களாக கணக்கிட்டு, அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.



'தொழிலாளர்கள், அன்றாடங்காச்சிகளிடம், கெடுபிடிகளை காண்பிக்காதீர்கள்; அவர்கள் நொந்து போயுள்ளனர்...' என, கூறத் தோன்றும் வகையில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் பேட்டி:
கர்நாடகாவிலிருந்து, 'இ - பாஸ்' இன்றி, ஓசூர் பகுதிக்கு பணிக்கு வருவோர், அம்மாநில எல்லையில் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு, அதிக துாரம் நடந்து தமிழகத்துக்குள் வர முடியாது. அவ்வாறு வந்தால், கலெக்டர் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X