இதே நாளில் அன்று

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement
 இதே நாளில் அன்று

1927 ஜூலை 1

உத்தர பிரதேசம் மாநிலத்தில், பால்லியா மாவட்டத்தில், இப்ராஹிம்பட்டி கிராமத்தில், ஒரு விவசாய குடும்பத்தில், சந்திரசேகர் பிறந்தார். அரசியல் விஞ்ஞானத்தில், பட்டம் பெற்றார். உத்தர பிரதேச பிரஜா சோஷலிஸ்ட் கட்சியில் பொதுச் செயலரானார். பின், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது, சிறையில் அடைக்கப்பட்டார்.மக்களின் பிரச்னைகளை அறிவதற்காக, காந்திஜியின் சமாதியில் இருந்து, கன்னியாகுமரி வரை, 4,260 கி.மீ., நடைபயணம் மேற்கொண்டார். சமாஜ்வாதி ஜனதா கட்சியைத் துவக்கினார்.வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு, நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வியுற்றதால், காங்., ஆதரவுடன், 1990 நவ., 10ல், இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக, சந்திரசேகர் பதவியேற்றார். காங்., தலைவர் ராஜிவ், தன் வீட்டை இரண்டு போலீசார் கண்காணிக்கின்றனர் என்ற அற்ப காரணத்தைக் கூறி, 1991 மார்ச், 6ம் தேதி, சந்திரசேகரின் ஆட்சியை கவிழ்த்தார். 2007 ஜூலை, 8ம் தேதி இறந்தார். சந்திரசேகர் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X