யு.ஏ.இ.,யில் அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று முதல் திறப்பு| UAE to reopen places of worship on July 1 | Dinamalar

யு.ஏ.இ.,யில் அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று முதல் திறப்பு

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (5)
Share
அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்சில்(யு.ஏ.இ.,) மசூதிகள், கோவில்கள், சர்ச்சுகள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் சில கட்டுப்பாடுகளுடன் இன்று(ஜூலை 1) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன.கொரோனா பரவலால், யு.ஏ.இ.,யில், கடந்த மார்ச் மாதம் அனைத்து வழிபாட்டு தலங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. தற்போது அங்கு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து, அனைத்து வழிபாட்டு

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்சில்(யு.ஏ.இ.,) மசூதிகள், கோவில்கள், சர்ச்சுகள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் சில கட்டுப்பாடுகளுடன் இன்று(ஜூலை 1) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன.latest tamil newsகொரோனா பரவலால், யு.ஏ.இ.,யில், கடந்த மார்ச் மாதம் அனைத்து வழிபாட்டு தலங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. தற்போது அங்கு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து, அனைத்து வழிபாட்டு தலங்களையும் தளர்வுகளுடன் திறக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதன்படி, இன்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டாலும், 30 சதவீத பொதுமக்களுக்கு மட்டுமே வழிபாடு செய் அனுமதிக்கப்படுவர். கொரோனா தொற்றுள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், வயதானவர்கள், 12 வயதுக்கு கீழுள்ளவர்கள், நாள்பட்ட நோயாளிகளுக்கு வழிபாட்டு தலங்களுக்குள் செல்ல அனுமதி இல்லை.


latest tamil newsஅதேசமயம் மறுஉத்தரவு வரும் வரை, வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் சிறப்பு தொழுகைக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், தொழில்துறை பகுதிகள், பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள் பகுதிகளில் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மசூதிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X