பாக்.,கில் கடந்த 24 மணிநேரத்தில் 2,846 பேருக்கு கொரோனா| COVID-19 kills 2, 846 in Pakistan in last 24 hours | Dinamalar

பாக்.,கில் கடந்த 24 மணிநேரத்தில் 2,846 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (2)
Share
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 2,846 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அறிவித்துள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. பாகிஸ்தானில் நோய் தொற்றை கட்டுப்படுத்த இம்ரான் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாக்.,கில் கடந்த 24 மணிநேத்தில் புதிதாக 2,846 பேருக்கு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 2,846 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அறிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. பாகிஸ்தானில் நோய் தொற்றை கட்டுப்படுத்த இம்ரான் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாக்.,கில் கடந்த 24 மணிநேத்தில் புதிதாக 2,846 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனையொட்டி மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,09,337 ஆக அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் 118 பேர் பலியாகினர். பாக்.,கின் கொரோனா தொற்றுக்கு இதுவரை 4,304 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 98,503 பேர் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


latest tamil news



பாக்.,கின் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் சிந்துவில் 81,985 பேர், பஞ்சாப்பில் 75,501 பேர், கைபர்-பக்துன்க்வாவில் 26,115 பேர், இஸ்லாமாபாத்தில் 12,775 பேர், பலுசிஸ்தானில் 10,426 பேர், கில்கித்-பல்திஸ்தானில் 1,470 பேர், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 1,065 பேர் அடங்குவர். நேற்று ஒரே நாளில் 20,930 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை 12,83,092 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X