அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை: அமைச்சர் தலைமையில் ஆலோசனை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கினார். கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இதில், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சுகாதாரமான முறையில் தரமான உணவு வழங்கவேண்டும். நோயாளிகளுக்கு தேவையான நாளிதழ்கள், புத்தகங்கள் வழங்கி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதிகளவு தண்ணீர் தேவைப்படுவதால், உடனடியாக மருத்துவமனை வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கவேண்டும் என அமைச்சர் சண்முகம் கூறினார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறிதல் பணிகள் , நோயாளிகளுக்கு தேவையான படுக்கை, சுவாசக்கருவிகளின் தேவை குறித்தும், டாக்டர்கள் தேவை குறித்து மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மற்றும் ,சுகாதாரப்பணிகள் இணை இயக்குநரிடம் அமைச்சர் கேட்டறிந்தார். மருத்துவர்கள் சுழற்சி முறையில் சிகிச்சை பணிகளை மேற்கொள்ள அமைச்சர் உத்தரவிட்டார்.கூட்டத்தில், எஸ்.பி., ஜெயக்குமார் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 450 கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் 45 ஒலிப்பெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், ஊரடங்கு உத்தரவு காலத்தில் 13,398 இரு சக்கர வாகனங்கள், 341 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 488 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 14,227 வானங்கள் அரசு விதிகளை மீறியதற்காக வழக்குகள் பதியப்பட்டுள்ளன.இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எல்லைப்பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X