சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

மூலிகையில் முக கவசம் தயாரிக்கிறேன்!

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement
 மூலிகையில் முக கவசம் தயாரிக்கிறேன்!

கொரோனா பரவலுக்கு எதிரான கருவியாக அனைவரும் பயன்படுத்தும் முக கவசத்தை, வித்தியாசமாக, மூலிகை போட்டு தயாரித்து, விற்பனை செய்து வரும், சென்னை, கூடுவாஞ்சேரியை சேர்ந்த வரலட்சுமி சபரிநாதன்: படித்து முடித்ததும், டி.சி.எஸ்., கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதன்பின், தனியார் கல்லுாரி ஒன்றில் மேனேஜராக பணியாற்றினேன்.
நகர வாழ்க்கை பிடிக்காமல், சென்னை அருகே, கூடுவாஞ்சேரியில் உள்ள கலிவந்துபட்டு பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறேன்.

இங்கு நல்ல காற்றோட்டம், சுகாதாரம் நிலவுகிறது. முதலில், 25 மூலிகைகள் அடங்கிய, மூலிகை சாம்பிராணி தயாரித்து, விற்பனை செய்தேன். அதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.
அதன்பின், கொரோனா வந்து விட்டது. கொரோனாவை எதிர்கொள்ள, மூலிகை முக கவசம் தான் சரிப்பட்டு வரும் என கருதினேன்.ஜனவரி மாதமே, 'மூலிகை மாஸ்க்' சிலவற்றை தயாரித்து, அமெரிக்காவில் உள்ள என் தோழிக்கு அனுப்பி, அணியச் செய்தேன்.
அதனால் கிடைத்த உற்சாகத்தில், இப்போது நான் மட்டும் தனியாக, வீட்டில் இருந்தபடி, கைத் தொழில் போல, மூலிகை மாஸ்க் தயாரிக்கிறேன்.

பை போன்ற அமைப்பில் இருக்கும் இந்த மாஸ்க்கின் உட்புறத்தில், கபசுர குடிநீரில் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் பெரும்பாலான மூலிகைகள் கொண்ட பையை வைத்து, அதை மூடி, முகத்தில் அணிய வேண்டும். அந்த மூலிகைகள், மூன்று நாட்களுக்கு ஒரு முறை காலாவதியாகி விடும்; அதன் பின், வேறு மூலிகை பையை, முக கவச பையில் வைத்து அணிய வேண்டும்.இதனால், முக கவசத்தை அடிக்கடி சுத்தம் செய்யவும் முடியும். சுத்தமான மூலிகைகளை தொடர்ந்து பயன்படுத்தவும் முடியும். கபசுர குடிநீரில் உள்ள மூலிகைகளில் பெரும்பாலானவை, நுரையீரலுக்கு நன்மை செய்யக் கூடியவை.
என் இந்த சின்ன முயற்சிக்கு, என் கணவர் மற்றும் குடும்பத்தினர் உறுதுணையாக உள்ளனர். முக கவசம் என்ற பெயரில், பிளாஸ்டிக் பொருட்களை முகத்தில் மாட்டுவதால் தீங்கு தான் ஏற்படும்.
அதற்குப் பதிலாக, இயற்கையாக விளைந்த பருத்தியிலிருந்து தயாரிக்கப்படும் சுத்தமான துணியில் மூலிகைகளை வைத்து, முக கவசம் தயாரிக்கிறேன்; நல்ல வரவேற்பு உள்ளது.
முக கவசத்தில் இருக்கும் பருத்தி துணியின் தரத்திற்கு ஏற்ப, விலை, 50 - 70 ரூபாய் வரை உள்ளது. வேலைக்கு போகும் பெண்கள், அணியும் உடைக்கு ஏற்ப, முககவசம் அணிய விரும்புகின்றனர். அதற்கேற்ப, 'ரெயின்போ' நிறத்தில் தயாரிக்கிறேன்.
கோவை, பழநி போன்ற பல இடங்களில் இருந்தும், மூலிகை முககவசத்திற்கு, 'ஆர்டர்'
வருகிறது!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X