பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் ,திண்டிவனம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணாமாக வட கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.விழுப்புரத்தில் , நேற்று காலை முதல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, மாலை 3:00 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.பின், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை விழுப்புரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்தது.

இந்த மழையால், மானாவாரி பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திண்டிவனம்திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று வழக்கத்தை விட வெயில் கடுமையாக இருந்தது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நேற்று மாலை 4:00 மணியிலிருந்த திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. தொடர்ந்து காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால், திண்டிவனம் நகரத்தில் மின் சப்ளை நிறுத்தப்பட்டது.ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கன மழையால், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X