பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா அச்சத்தில் போலீசார் பாதுகாப்பு கவச உடைகள் வழங்க வேண்டும்

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

செஞ்சி : விழுப்புரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் கொரோனா தொற்று ஏற்படும் என அச்சப்படுவதால் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் முழு உடல் பாதுகாக்கும் பிபிஇ கிட் கவச உடைவழங்க வேண்டும்.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் சேலம், திருவண்ணாமலை, புதுச்சேரி என முக்கிய நகரங்களுக்கு செல்லும் பிரதான வழியாக விழுப்புரம் மாவட்டம் உள்ளது. இந்த வழியாக செல்லும் கார், பைக் , லாரி என அனைத்து வாகனங்களையும் விழுப்புரம் மாவட்ட போலீசார் நிறுத்தி இ-பாஸ் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்கின்றனர். இதில் சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் அதிகம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. சென்னையில் தொற்று அதிகரித்து வருவதால் , முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

இதன் பின் ஏராளமானவர்கள் அச்சத்தின் காரணமாக எந்த அனுமதியும் இன்றி இரு சக்கர வாகனங்களில் சொந்த கிராமங்களுக்கு செல்கின்றனர். இவர்கள் கொரோனா பரிசோதனையும் செய்யாமல் வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.இந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சென்னையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ய விழுப்புரம் மாவட்ட போலீசார் அச்சப்படுகின்றனர். ஏற்கனவே விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட போலீசார் கொரானாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு துவைத்து பயன்படுத்தும் ' பிபிஇ கிட் 'எனப்படும் முழு உடல் பாதுகாப்பு கவச உடைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X