சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விருதையில் கொரோனாவுக்கு இருவர் பலி பரிசோதனை கூடங்களில் தாசில்தார் ஆய்வு

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கொரோனா பாதிப்புக்கு ஜவுளி கடை ஊழியர்கள் இருவர் இறந்ததை தொடர்ந்து, பரிசோதனை கூடங்களில் தாசில்தார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்த 60, 63 வயது மதிக்கத்தக்க ஊழியர்கள் இருவர், அடுத்தடுத்து இறந்தனர். விசாரணையில், இருவரும் கொரோனா பாதிப்பில் இறந்தது உறுதியானதால், நேற்று முன்தினம் இரவு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.மேலும், கடையில் பணிபுரிந்த ஊழியர்கள், சமீபத்தில் வந்து சென்ற வாடிக்கையாளர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், தாசில்தார் கவியரசு தலைமையிலான வருவாய்த்துறை ஊழியர்கள், நகரில் உள்ள ரத்த பரிசோதனை கூடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சமீபத்தில் பரிசோதனைக்கு வந்து சென்ற நபர்களில் அறிகுறி நபர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கவும், உரிய பாதுகாப்புடன் பரிசோதனையை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.தொடர்ந்து, பெருவணிக நிறுவனங்களில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, உரிமையாளர்களிடம் எச்சரித்தார். வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், வி.ஏ.ஓ., ராமச்சந்திரன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X