இடிந்து விழும் நிலையில் ஊராட்சி கட்டடம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடிந்து விழும் நிலையில் ஊராட்சி கட்டடம்

Added : ஜூன் 30, 2020
Share

மூங்கில்துறைப்பட்டு : கானாங்காட்டில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த கானாங்காட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி கட்டடம் தற்போது மேற்கூரைகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், ஊராட்சி வேலைகள் அனைத்தும் அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.பழுதான ஊராட்சி கட்டடத்தை சமூக விரோதிகள் தங்கள் கூடாரமாக மாற்றியுள்ளனர். கட்டடத்தில் உள்ள கதவை உடைத்து உள்ளே மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊருக்கு நடுவே இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, பழைய ஊராட்சி கட்டத்தை இடித்து அகற்றி புதிய ஊராட்சி கட்டடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X