பொது செய்தி

தமிழ்நாடு

முகக் கவசம் அணிந்தால் தொற்றைத் தவிர்க்கலாம்

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி, கட்டாயம் முகக் கவசம் அணிந்தால் நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தலாம் என கலெக்டர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:மாவட்டத்தில், கள்ளக்குறிச்சியில் 16 முதல் 19 வரை உள்ள வார்டுகள், சுந்தர விநாயகர் கோவில் தெரு, சின்னசேலம், வடக்கனந்தல், உளுந்துார்பேட்டை மேற்கு கந்தசாமிபுரம் சாஸ்திரி நகர், சங்கராபுரம் அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன.இப்பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தொற்று அறிகுறி கண்டறிதல், தடுப்பு அமைத்தல், கிருமி நாசினி தெளித்தல், தொற்று உள்ளவர்களுடன் தொடர்பு குறித்து அறிதல் உள்ளிட்ட பணிகளை தினமும் மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் உள்ள 21 நகராட்சி வார்டுகளில் 3, 20வது வார்டுகளைத் தவிர மற்ற வார்டுகளில் வசிப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஏதேனும் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம். பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி, கட்டாயம் முகக் கவசம் அணிந்தால் நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X