பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட் கமிட்டியில் பயனற்று கிடக்கும்

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் அறுவடை இயந்திரங்கள் பயனற்று கிடக்கிறது.

தமிழ்நாடு வேளாண் மார்க்கெட் கமிட்டிக்கு வேளாண் பொறியியல் துறை சார்பில் கடந்த 2012ம் ஆண்டு தலா 83 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு மக்காச்சோள அறுவடை இயந்திரங்கள் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மக்காச்சோளத்தினை அதிகளவில் பயிரிட்டு வருவதால், பயிர் சாகுபடி பருவங்களில் கமிட்டியில் கோடிக்கணக்கிலான வணிகம் நடப்பதாலும், இந்த இயந்திரங்கள் அறுவடை பணிக்காக ஒரு மணி நேரத்திற்கு 96 ரூபாய் என வாடகை பெறப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்த இயந்திரங்களை டிராக்டர் மூலமாகத்தான் விவசாயிகள் எடுத்துச் செல்ல முடியும். பணியாட்கள் மூலமாக மக்காச்சோள பயிரை வெட்டி எடுத்த பின்னரே இந்த இயந்திரம் மூலம் பணி செய்ய முடியும். இதுபோன்ற சிக்கல்களால் இந்த இயந்திரங்களின் பயன்பாட்டை விவசாயிகள் தவிர்த்தனர்.அத்துடன் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய எளிதில் மக்காச் சோளத்தை அறுவடை செய்யும் இயந்திரங்கள் தனியார்களிடம் இருந்து வாடகைக்கு கிடைத்ததால், மிகவும் பழமையான தொழில் நுட்பத்தில் இயங்கும் இந்த அறுவடை இயந்திர பயன்பாடு முற்றிலும் குறைந்தது.

கள்ளக்குறிச்சி பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள அறுவடை பணிகள் நடக்கும் நிலையிலும், மார்க்கெட் கமிட்டியில் உள்ள இந்த அறுவடை இயந்திரங்கள் மூலம் இதுவரை 13 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான தொகையே வாடகையாக கிடைத்துள்ளது. அத்துடன் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் திறந்தவெளியில், காற்று, மழை, வெயிலில் போடப்பட்டு ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 இயந்திரங்களும் மக்கி பாழாகி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X