வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனித் திருமஞ்சனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனித் திருமஞ்சனம்

Added : ஜூன் 30, 2020
Share

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆனித் திருமஞ்சனத்தையொட்டி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதனையொட்டி கடந்த 28ம் தேதி அன்று காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம், நடராஜர் சிவகாம சுந்தரிக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் வீரட்டானேஸ்வரர் உள்ளிட்ட மூல மூர்த்திகளுக்கு அபிஷேக, அலங்காரம் நடந்தது.பகல் 11:00 மணிக்கு நடராஜர் சிவகாம சுந்தரிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. சிவாச்சாரியார்கள் மட்டுமே விழாவை நடத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X