சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனிமை முகாமில் மூவருக்கு தொற்று

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரம் தனிமை முகாமில் இருந்த மூவருக்கு நேற்று தொற்று உறுதியானதால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 53 வயது நபர், பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் வேலையின்றி தவித்த அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சங்கராபுரம் வந்தவர், அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் உள்ள தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.டாக்டர் சம்பத்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து நேற்று அவர், தனிமை முகாமில் இருந்து சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேபோன்று, சங்கராபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த 47 மற்றும் 23 வயதுடைய 2 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. உடன் இருவரும் தனிமை முகாமில் இருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X