ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிதாக 421 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

அபுதாபி : ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் 421 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பாதிப்புகளை கட்டுப்படுத்த (UAE) அந்நாட்டு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்நிலையில் இன்று புதிதாக 421 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 48,667 ஆக அதிகரித்தது. அரபு எமிரேட்சில் புதிதாக ஒருவர் பலியானார். நாட்டில் தற்போது வரை 315 பேர் பலியாகியுள்ளனர். 63,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


latest tamil news



அரபு எமிரேட்சில் இன்று 490 பேர் புதிதாக குணமடைந்தனர். மொத்தமாக 37,566 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர். தற்போது 11,101 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X