கராச்சி தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு; பாக்., அபாண்ட குற்றச்சாட்டு

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி பங்குச்சந்தை தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக பாக்., குற்றம்சாட்டி உள்ளது. அதற்கு 'நாங்கள் ஒன்றும் பாகிஸ்தான் போல் அல்ல' என இந்தியா தக்க பதிலடி தந்துள்ளது.



latest tamil news



பாகிஸ்தானின் கராச்சியில், சண்ட்ரிகர் சாலையில், பங்குச்சந்தை அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இங்கு, நேற்று(ஜூன் 29) காலை, பங்குச்சந்தை வர்த்தக பணிகள், பரபரப்பாக நடைபெற்று வந்தன. அப்போது, பயங்கரவாதிகள் நான்கு பேர், அந்த வளாகத்திற்குள் காரில் வந்தனர். காரில் இருந்தபடியே, துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், கையெறி குண்டுகளையும் வீசினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், எதிர் தாக்குதல் நடத்தினர். இதில், போலீஸ் எஸ்.ஐ., ஒருவர், நான்கு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இருவர் பலியாயினர்; 7 பேர் காயமடைந்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த, பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், பயங்கரவாதிகள் நால்வரும் கொல்லப்பட்டனர்.


latest tamil news



இத்தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என பாக்., அபாண்ட குற்றச்சாட்டை இந்தியா மீது சுமத்தி உள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்மூத் குரேஷி கூறுகையில், 'இத்தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது; இந்தியாவின் ஸ்லீப்பர் செல்கள் தான் தாக்குதலுக்கு காரணம்' என குற்றம்சாட்டி உள்ளார்.


இந்தியா பதிலடி:


இதற்கு பதிலடி தரும் வகையில், இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,


latest tamil news


'பாக்., இந்தியா மீது வீண்பழி சுமத்துகிறது. உலகில் எங்கு பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும், அதை கண்டிக்கும் முதல் நாடாக இந்தியா இருக்கும். அல்கொய்தா பயங்கரவாத தலைவன் ஒசாமா பின்லேடனை, பாக்., பிரதமர் இம்ரான், தியாகி என கூறியதை குரேஷி மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அவர் பதிலடி தந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
01-ஜூலை-202010:13:09 IST Report Abuse
மலரின் மகள் சே தாக்குதல் சொல்லி கொள்ளும் படியில்லையே. கில்கிஸ்ட் தீவிரவாதிகள் என்று பாகிஸ்தான் கூறும் அந்த தேசப்பற்றாளர்கள் நன்கு பயிற்சி பெறவும், தக்க பாதுகாப்புடன் மேதகு செயலை செய்யவும் இயலாமல் போனதில், பாகிஸ்தானியர்கள் சிலரின் அதிர்ஷ்டம் இருக்கும் போல.
Rate this:
Cancel
01-ஜூலை-202007:57:41 IST Report Abuse
ஸாயிப்ரியா பின்லேடன் நண்பருக்கு இந்தியா பின்னணியில் இருக்காது.
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
01-ஜூலை-202007:23:33 IST Report Abuse
natarajan s பெரும்பாலும் கராச்சியில் எந்த தாக்குதல் என்றாலும் அதில் இந்தியாவின் பங்கு இருக்கும். அவர்களது பொருளாதார தலைமையிடம் கராச்சி. இந்தியாவின் சரபிஜிட் சிங் , குலபூஷண் யாதவ் காஷ்மீரி சிங் போன்றவர்கள் அங்கிருந்துதான் பாகிஸ்தானல் கைது செய்யப்பட்டார்கள். அதனால் அங்குள்ளவர்கள் கவனத்தை திருப்ப இதுமாதிரி குறை சொல்வது வழக்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X