சென்னை: வழி பாட்டுதலங்களுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் வருமானத்திற்கு கீழ் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் வரும் 6 ம் தேதி முதல் அனைத்து ஊராட்சிகளிலும் திறந்து கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே வழி பாட்டு தலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:
அனுமதிக்கப்பட்ட சிறிய வழிபாட்டு தலங்களின் நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். வழிபாட்டு தலங்களுக்கு வருவோர் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே வழிபாட்டு தலங்களுக்குள்அனுமதிக்க வேண்டும். வழிபாட்டுதலங்களுக்கு வருபவர் 6 அடி தள்ளி நின்று சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். எந்தவித அறிகுறியும் இல்லாதவர்களை மட்டுமேவழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்க வேண்டும்.

பஜனை உள்ளிட்ட இறைபாடல்கள் பாட அனுமதி இல்லை. அன்னதான கூடங்களில்தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகள் சுத்தமாக தோன்றினாலும் மீண்டும் ஒருமுறை கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். பிரசாதம் ,தீர்த்தம் வழங்க அனுமதி இல்லை. தேங்காய் ,பூ,பழங்கள் போன்றவற்றை வழங்க கூடாது.வழிபாட்டு தலங்களில் உள்ள கடைகளில் பிரசாதம் வாங்கினாலும் அங்கேயே உட்கார்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. சிலைகள் , புனித நூல்களை தொட்டு வணங்க கூடாது. என அரசு வெளியிட்டுள்ள வழிபாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE