விஷ வாயு கசிவு இருவர் பலி

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

விசாகப்பட்டினம்; ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே, மருந்து பொருட்கள் தயாரிக்கும் ஆலையில், நேற்று, பென்சீன் விஷ வாயு கசிவால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில், இருவர் உயிரிழந்தனர்; நான்கு பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, விசாகப்பட்டினத்தை அடுத்த பரவாடாவில், மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.இவற்றில் ஒரு நிறுவனத்தில், நேற்று காலை பணி தொடங்கிய நிலையில், ஒரு உலைக்குள் செலுத்தப்பட்ட, 'பென்சீன்' என்ற விஷ வாயு கசிந்து வெளியேறியது. இதை சுவாசித்ததால், அங்கிருந்த ஆறு ஊழியர்கள், மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த, மற்ற பகுதியில் இருந்த ஊழியர்கள், கசிவு ஏற்பட்ட உலையை முழுமையாக மூடினர்.பின், மயங்கி விழுந்த ஆறு பேரையும், மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், வழியிலேயே இருவர் பலியாயினர். மற்ற நால்வரும், சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீபத்தில், மே, 7ம் தேதி, விசாகப்பட்டினத்தின் புறநகர் பகுதியான கோபாலபட்டினம் அருகே, 'எல்.ஜி., பாலிமர்ஸ்' என்ற ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவால், 11 பேர் பலியாகினர்; 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X