2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

ஸ்ரீநகர்; ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், பழத்தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த இரு பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரால், நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு -- காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹாரா பகுதியில், 26ம் தேதி பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில், சி.ஆர்.பி.எப்., என்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் மற்றும் ஆறு வயது சிறுவன் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலில் தொடர்புடைய, பயங்கரவாதி ஜாகித் தாஸ் உள்ளிட்ட மூவர், அனந்த்நாக் மாவட்டம் வாகமா கிராமத்தில் உள்ள பழத்தோட்டத்திற்குள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனால், அப்பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார், நேற்று காலை சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், இரு பயங்கரவாதிகள்கொல்லப்பட்டனர். ஆனால், ஜாகித் தாஸ்அங்கிருந்து தப்பி சென்றதாக, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X