பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்...

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement
 செய்தி சில வரிகளில்...

காய்கறி விற்கும் தடகள வீராங்கனை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தை சேர்ந்த, மாநில போட்டிகளில் எட்டு தங்க பதக்கங்கள் வென்றுள்ள, தடகள வீராங்கனை கீதா குமாரி, வறுமையால், தள்ளுவண்டியில், காய்கறி வியாபாரம் செய்யும் நிலை உருவானது. இதையறிந்த, முதல்வர் ஹேமந்த் சோரன், பயிற்சிகளை தொடரும் வகையில் கீதா குமாரிக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டார். இதற்கான காசோலை, நேற்று முன்தினம், அவரிடம் வழங்கப்பட்டதுடன், மாதாந்திர ஊக்கத்தொகையாக, 3,000 ரூபாய் வழங்கப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் நடவடிக்கைக்கு தடை

மும்பை: மஹா.,வின் மும்பையில், தனியார் தொலைக்காட்சி தலைமை செய்தி ஆசிரியர்அர்னாப் கோஸ்வாமி மீது, பொது அமைதிக்கு இடையூறு செய்ததுடன், வன்முறைகளை துாண்டும் வகையில் செய்தி வெளியிட்டதாக போலீசார், இரு வழக்குகளை பதிவு செய்தனர். இவற்றை ரத்து செய்ய கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை, நேற்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், 'அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை' என கூறியதுடன், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், போலீசாருக்கு உத்தரவிட்டது.

தாஜ் ஓட்டலை தாக்குவதாக மிரட்டல்

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள தாஜ் ஓட்டல், 2008ல், பாக்., பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானது.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, ஓட்டல் காவலர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பில், கராச்சியில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர், ஓட்டல் மீது தாக்குதல் நடத்தப்படும் என, கூறியுள்ளார். இதனால், ஓட்டலுக்கான பாதுகாப்பை பலப்படுத்தியதுடன், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கோடி மக்கள் பயனடைந்த திட்டம்

மும்பை: மஹா.,வில், ஏழைகள், புலம் பெயர் தொழிலாளர்கள், வீடற்றவர்கள் உள்ளிட்ட, பல்வேறு தரப்பினரும் பயனடையும் வகையில், 10 ரூபாய்க்கு முழு சாப்பாடு வழங்கும், மாநில அரசின், 'ஷிவ் போஜன்' திட்டம், ஜனவரியில் தொடங்கப்பட்டது.கொரோனா வைரஸ் பாதிப்பால், தற்போது, 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை, ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாக, முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று கூறினார்.

17 வயது சிறுமி கொலை: தந்தை கைது

பஹ்ரைச்: உ.பி.,யின் பஹ்ரைச் மாவட்டத்தில், சுபாஷ் என்பவரின், 17 வயது மகள், அதே ஊரை சேர்ந்த சோட்கா என்பவரை, காதல் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து, சுபாஷ் கொடுத்த புகாரின் படி, போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, சோட்காவை, 23ம் தேதி கைது செய்தனர். ஆனால், அவருக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க, சிறுமி மறுத்துவிட்டார்.இதனால் ஆத்திரம் அடைந்து, மகளை கொலை செய்த சுபாஷை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அமீர் கான் பணியாளர்களுக்கு கொரோனா

மும்பை: மஹா.,வின் மும்பையில் வசிக்கும், ஹிந்தி நடிகர் அமீர் கான், 55, மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.அவர்களில் யாரும் வைரசால் பாதிக்கப்படவில்லை என, முடிவுகள் வந்தன. ஆனால், அவரது பணியாளர்கள் சிலர் பாதிக்கப்பட்டு உள்ளதால், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக, அமீர் கான், நேற்று கூறினார்.

500 மேற்பார்வையாளர்கள் பணி நீக்கம்

புதுடில்லி: ரயில்களில், பயணியருக்கு உணவு பொருட்கள் தயாரித்து வழங்கப்படுகிறது. இவற்றின் தரத்தை ஆராய்தல், பயணியர் புகார்களை கேட்டறிதல், உணவுக்கான விலையை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, 560 மேற்பார்வையாளர்களை, இரண்டாண்டுஒப்பந்த அடிப்படையில், ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம், 2018ல் நியமித்தது.இவர்களில், 500க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்து, ஐ.ஆர்.சி.டி.சி., உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X