தீ விபத்து: 7 கொரோனா நோயாளிகள் பலி

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

கெய்ரோ; எகிப்தில், தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆறு ஆண்கள் உள்ளிட்ட, ஏழு பேர் பலியாகினர்.

வடகிழக்கு ஆப்ரிக்க நாடான எகிப்தின், அலெக்ஸாண்ட்ரியா நகரில், ஒரு தனியார் மருத்துவமனையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவமனையில், வைரசால் பாதிக்கப்பட்டோருக்கான வார்டில், 'ஏசி' இயந்திரம், மின் கசிவின் காரணமாக, நேற்று முன்தினம் வெடித்து சிதறியதுடன், தீப்பிடித்தது.இதனால் ஏற்பட்ட கரும்புகைக்கு நடுவே, பணியில் இருந்த நர்சுகள், தீயை அணைக்க முயன்றுள்ளனர். அவர்களை மீறி, தீ வேகமாக பரவியதால், சிகிச்சையில் இருந்த பலரும், உயிரை காப்பாற்றிக் கொள்ள வெளியே தப்பி ஓடினர்.

ஆனால், பரவல் வேகம் அதிகமாக இருந்ததால், தீயில் சிக்கி, ஆறு ஆண்கள், ஒரு பெண் என, ஏழு பேர் பலியாகினர்; ஒருவர் காயமடைந்தார். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, மருத்துவமனையின் பிற பகுதிகளுக்கு, தீ பரவுவதை கட்டுப்படுத்தினர்.தீ விபத்தின் காரணமாக, கொரோனா வார்டில் இருந்த, 'வென்டிலேட்டர்கள்', படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் முழுமையாக சேதமடைந்தன.எகிப்தில், கொரோனா வைரசுக்கு, 66 ஆயிரத்து, 754 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,872 பேர் பலியாகி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X