பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., மையங்களில் கிருமி நாசினி வைக்கப்படுமா?

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

சென்னை;'வங்கி கிளைகள் மற்றும் ஏ.டி.எம்., மையங்களில், கிருமி நாசினி வைக்காத வங்கிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை, அரசு மேற்கொண்டுள்ளது. வங்கிகளிலும் தனி மனித இடைவெளி, கிருமி நாசினி போன்றவை பயன்படுத்த வேண்டும் என, அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், ஏ.டி.எம்., மையங்களிலோ, பணம் செலுத்தும் இயந்திரம், 'பாஸ்புக்' அச்சிடுதல் போன்ற, அனைத்து சேவை உள்ள மையங்களிலும், கிருமி நாசினி திரவம் வைக்கப்படவில்லை.

வங்கி வாடிக்கையாளர்கள் கூறியதாவது:அத்தியாவசிய சேவைகளை தவிர, வேறு சேவைகளுக்கு வங்கிக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பணம் எடுத்தல், செலுத்துதல், காசோலை செலுத்துதல் போன்ற சேவைகளுக்கு, ஏ.டி.எம்., மையங்களை பயன்படுத்த வேண்டி உள்ளது.அவ்வாறு, அனைவரும் பயன்படுத்தும், ஏ.டி.எம்., மையங்களில், கிருமி நாசினி திரவம் வைக்கப்படுவதில்லை.சில வங்கி கிளையுடன் கூடிய ஏ.டி.எம்., மையங்களில், கிருமி நாசினி திரவம் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பெரும்பாலான ஏ.டி.எம்., மையங்களில், கிருமி நாசினி வைக்கப்படுவதில்லை.இதனால், கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, அனைத்து ஏ.டி.எம்., மையங்களிலும், கிருமி நாசினி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருமி நாசினி வைக்காத வங்கிகளுக்கு, அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X