பத்திரப்பதிவு, டோக்கன் மோசடி விசாரணையில் அதிகாரிகள் மவுனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பத்திரப்பதிவு, 'டோக்கன்' மோசடி விசாரணையில் அதிகாரிகள் மவுனம்

Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (1)
Share

சென்னை,; பத்திரப் பதிவுக்கான, 'டோக்கன்'களை மொத்தமாக பெற்று, 'பிளாக்கில்' விற்கும் தரகர்கள் மீது, புகார்கள் குவிந்து வருகின்றன.

தமிழகத்தில், பத்திரப் பதிவு பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, சொத்து பரிமாற்றம் செய்வோர், அது குறித்த அனைத்து தகவல்களையும், ஆன்லைன் முறையில் தாக்கல் செய்ய வேண்டும்.இந்த விபரங்களை சரிபார்த்து, அவர்களுக்கான நேரம் ஒதுக்கி, சார் - பதிவாளர்கள், 'டோக்கன்' வழங்குவர். டோக்கன் பெற்ற பின் தான், சம்பந்தப்பட்ட நபர்கள், பத்திரப் பதிவுக்கு செல்ல முடியும்.

இதில், ஆவண எழுத்தர்கள் பெயரில் வலம் வரும் தரகர்கள், போலியான தகவல்கள் அளித்து, டோக்கன்களை மொத்தமாக வாங்குகின்றனர். இதுதொடர்பாக, பல்வேறு தரப்பில் இருந்து, பதிவுத் துறை தலைமையகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.இது குறித்து, பாதிக்கப்பட்ட பொது மக்கள் கூறியதாவது:சென்னை மண்டலத்தில், சில சார் - பதிவாளர் அலுவலகங்கள் குறித்து மட்டும், விசாரணை துவங்கப்பட்டது. இந்த விசாரணையும், சார் - பதிவாளர்கள் ஒத்துழைக்காததால் பாதியில் முடங்கின.டோக்கன் மோசடியில், தரகர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள, சார் - பதிவாளர்கள் மீது, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், உயரதிகாரிகள், இந்த விஷயத்தை கிடப்பில் போட்டு விட்டனர்.ஒரு டோக்கன் பெற்றுத்தர, 20 ஆயிரம் ரூபாய் வரை கேட்டு, தரகர்கள் நிர்பந்திக்கின்றனர். அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X