அரசியல் செய்தி

தமிழ்நாடு

மந்திரி அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்தது மருத்துவமனை

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

சென்னை; தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு, கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதை, சென்னை மியாட் மருத்துவமனை நேற்று உறுதி செய்தது.

உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ஒரு வாரத்திற்கு முன், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியானது. ஆனால், அமைச்சர் தரப்பிலும், அரசு தரப்பிலும், இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள, விருந்தினர் மாளிகையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், மியாட் மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை.அவருக்கு எடுக்கப்பட்ட, சி.டி., ஸ்கேன் பரிசோதனையிலும், உடல் நிலை அனைத்தும் சீராக இருந்தது. எனினும், தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது, இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனையில், அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.லேசான இருமல் உள்ளதால், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் உறுப்புகள் சீராக உள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X