அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தார்மீக உரிமையை இழந்த முதல்வர்'

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

சென்னை; 'உடல் நல குறைவால் மரணம் என, மனசாட்சி இல்லாமல் மறைத்த முதல்வர், அப்பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:'சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கு விசாரணையை, உடனே, சி.பி.சி.ஐ.டி., மேற்கொள்ள வேண்டும்' என்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு, கணவரையும், மகனையும் இழந்து நிற்கும் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதற்கட்ட நீதி.போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட, காட்டுமிராண்டி தனமான கொலைகளை, 'உடல் நல குறைவால் மரணம்' என, மனசாட்சி இல்லாமல் மறைத்த, முதல்வர் இ.பி.எஸ்., பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார்.உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கொலை வழக்குப் பதிவு செய்து, உடனே, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.இந்த இரட்டை கொலையை மறைக்க, துணை போன அனைவரையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X