அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாரத்நெட் டெண்டர்: மந்திரி விளக்கம்

Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை; ''பாரத்நெட் திட்டத்தில், விரைவில், 'டெண்டர்' விடப்பட்டு, 2021 பிப்ரவரிக்குள் பணிகள் முடிக்கப்படும்,'' என, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்தும், 'பாரத்நெட்' திட்டம் நிறைவேற்றப்பட்டால், எஸ்.சி.வி., போன்ற, கேபிள் தொழில்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.அதனால், இந்த தொழிலில் முதலீடு செய்தவர்கள், ஆரம்பத்தில் இருந்து, எதிர்த்து வருகின்றனர்.பாரத்நெட் திட்டத்திற்காக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் சார்பில், 2019 டிச.,5ல், இணையதளம் வழியே, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.அப்பணிகள் முடிவடைவதற்குள், இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள், அறப்போர் இயக்கம் போன்றவை, 'மேக் இன் இந்தியா' விதிமுறைகளின் கீழ், இந்திய ஒப்பந்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை என, புகார் தெரிவித்தன.மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகத் துறை, ஜூன், 23ம் தேதி விசாரணை நடத்தியது. அதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, இந்திய உற்பத்தி நிறுவனங்களுக்கு, முன்னுரிமை வழங்குவது கடைபிடிக்கப்படும் என்றனர்.

இருப்பினும், அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு, மறு டெண்டருக்கு உத்தரவு வந்துள்ளது.இதில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்திய உற்பத்தி யாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பாரத்நெட் திட்டத்தில், மிக விரைவாக டெண்டர் விடப்பட்டு, 2021 பிப்ரவரிக்குள், பணிகள் முடிக்கப்படும்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
01-ஜூலை-202009:00:04 IST Report Abuse
RajanRajan . உருப்படியா திட்டம் போடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X