பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதாரத்துறை அனுமதியின்றி கபசுரக்  குடிநீர் வினியோகம்

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

திருப்புவனம்:திருப்புவனத்தில் பலரும் சுகாதாரத்துறைவழிகாட்டல் இன்றி கபசுர குடிநீர் வழங்கிவருகின்றனர்.

கொரானோ வைரஸ் பரவலால் உயிர்இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுவரை கொரானோவிற்கு மருந்து எதுவும் கண்டறியாத நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரானோ தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கபசுர குடிநீர் உள்ளிட்டசித்த வைத்திய முறைப்படி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழிகாட்டப்பட்டுள்ளது.

தன்னார்வலர்கள் என்ற பெயரில் சிலர் வீடுகள் தோறும் கபசுர குடிநீர் வழங்கிவருகின்றனர். சுகாதாரத்துறை வழிகாட்டல் இன்றி கபசுர குடிநீர் வழங்குவதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புஉள்ளது. உரிய பாதுகாப்பு கவசம் இன்றியும், சுகாதாரம் இன்றியும் கபசுர குடிநீர் வழங்கிவருகின்றனர். மாவட்ட நிர்வாகம் அனுமதியுடன்கபசுர குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X