பொது செய்தி

தமிழ்நாடு

50 ஆயிரம் பேர் குணமாகி வீடு திரும்பினர் 90 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

சென்னை; தமிழகத்தில், நேற்று, 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 90 ஆயிரத்து, 167 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை, 50 ஆயிரத்து, 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில், 90 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அந்த ஆய்வகங்களில் நேற்று மட்டும், 30 ஆயிரத்து, 242 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், சென்னையில், 2,393 பேர்; செங்கல்பட்டில், 160 பேர்; மதுரையில், 246 பேர்; திருவள்ளூரில், 153 பேர்; காஞ்சிபுரத்தில், 90 பேர்; தேனியில், 75 பேர் என, மாநிலம் முழுதும், 3,943 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அவர்களில், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், 87 பேர். மார்ச் மாதத்தில் இருந்து, நேற்று வரை, 11.70 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், 90 ஆயிரத்து, 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 58 ஆயிரத்து, 327 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.செங்கல்பட்டில், 5,419 பேர்; கடலுாரில், 1,073 பேர்; காஞ்சிபுரத்தில், 1,977 பேர்; மதுரையில், 2,557 பேர்; திருவள்ளூரில், 3,830 பேர்; திருவண்ணாமலையில், 1,824 பேர்; வேலுாரில், 1,308 பேர் பாதிப்புக்கு ஆளாகிஉள்ளனர். மற்ற மாவட்டங்களில், 1,000த்துக்கு குறைவான எண்ணிக்கையில் தொற்று பாதிப்பு உள்ளது.நேற்று, 2,325 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இவர்களையும் சேர்த்து, மொத்தம், 50 ஆயிரத்து, 74 பேர் குணமடைந்துள்ளனர்.சில தினங்களில் இறந்தவர்களில், 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, கொரோனாவால், 1,201 பேர் இறந்துள்ளனர். சென்னையில், 888 பேர்; செங்கல்பட்டில், 92 பேர்; காஞ்சிபுரத்தில், 21 பேர்; மதுரையில், 32 பேர்; ராமநாதபுரத்தில், 10 பேர்; திருவள்ளூரில், 69 பேர்; திருவண்ணாமலையில், 11 பேர்; விழுப்புரத்தில், 15 பேர் பலியாகி உள்ளனர். மற்ற மாவட்டங்களில், 10க்கும் குறைவான அளவில் இறப்புகள் உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X