சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள் :ராமநாதபுரம்

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement

மதுபாட்டில், புகையிலை பறிமுதல்

பரமக்குடி: சத்திரக்குடி தென்றல் நகர் சசிகுமார். இவர் சேமனுார் ரயில்வே கேட் அருகே பெட்டி கடை நடத்தி வருகிறார்.இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி கடையை சோதனையிட்டார். பதுக்கி வைத்திருந்த 624 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கமுதி: புதுக்கோட்டை கிராமத்தில் போலீசார் மணிகண்டன் என்பவர் வீட்டை சோதனை செய்தனர்.வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த, 162 மது பாட்டில்கள், 30 பண்டல் புகையிலை, மதுபாட்டில் கடத்தி வர பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.

மாணவர் தற்கொலை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆனந்துார் ராதானுார் அருகே நெட்டேந்தலை சேர்ந்த கோட்டைச்சாமி மகன் மீனாட்சி சுந்தரம் 17, இவர் 12 ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.விடுமுறையில் வீட்டில் இருந்து >ள்ளார். தனது சகோதரியுடன் பிரச்னை செய்ததால அம்மா கண்டித்துள்ளார். மனமுடைந்த மீனாட்சி சுந்தரம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லுாரி அலுவலர் மரணம்

ராமநாதபுரம்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைசேர்ந்தவர் ரமேஷ் 50, ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் உதவி அலுவலராக பணிபுரிந்தார். அவர் ராமநாதபுரம் சாலைத்தெரு தனியார்விடுதியில் தங்கியிருந்தார். நேற்று அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடலை மீட்டு தற்கொலையா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X