கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்

Added : ஜூன் 30, 2020
Share

சென்னை; சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் ஆஜராக, மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசு சார்பில், உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக, ஜி.ராஜகோபாலன் ஆஜராகி வந்தார். பல ஆண்டுகளாக, இந்த பதவியை வகித்து வந்தார். தற்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக, மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய சட்ட அமைச்சகம், இந்த நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் வரை, இந்தப் பதவியில், மூத்த வழக்கறிஞர் சங்கரநாராயணன் நீடிப்பார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X